Monday, September 19, 2011

அர்த்தம்

சாக நினைத்தேன் வாழ்வின் அர்த்தம் தந்தாய்,
உன்னோடு வாழ நினைத்தேன் நீயே,
கொன்றுவிட்டாய் உன் பார்வையால்!

Friday, September 16, 2011

எங்கள் கனவு கன்னி

VIP- யாய்  வந்த நட்சத்திரமே,
வாலிபர்கள்  மனதில் வாலி-ball ஆடியவள் நீயே!!!  

உன்னை பார்த்தாலே பரவசம் நீ,
நேருக்கு நேர் வந்தால், துள்ளாத மனமும் துள்ளும்!!!

12 B -ல் அவள் வருவாளா என்று ,காத்து இருந்தேன்,
கண்ணெதிரே  தோன்றினால்
உன்னை  பார்த்தேன்  ரசித்தேன்!!!

பிரியமானவளே,
நீ  ஒரு New, கோவில்பட்டி  வீரலட்சுமி!!!

அந்தபுரத்தில் ,
ஜோடி -யாய்  உன்  கன்னத்தில்  முத்தமிட்டால்
அந்த  time என்  கனவே  கலையாதே .....

அன்று  நட்புக்காக உன்னை இடை  அழகி என்றோம்,
அடித்தது  ஜாக்பாட்  உனக்கு  கொண்டாட்டம்,
எங்களுக்கு  திண்டாட்டம்.. :(

எங்களுக்கு   நீ  வேண்டும் Oncemore.....

Tuesday, September 13, 2011

நினைவுகளுடன்

மனம் விட்டு பேசி மாதங்கள் ஆனாலும்
மனதை விட்டு நீங்கா உன் நினைவுகளுடன் நான்

Tuesday, September 6, 2011

கவிதைகள்

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
சுமாராக இருக்கிறது என்றாய்,
ஆம் எல்லாம் சுமாராக தான் இருக்கிறது
உன் கை எழுத்துத்திற்கு முன்னால்...

Saturday, August 6, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்


வேதனைகளை சோதனைகளாக எடுத்து,
சோதனைகளை சாதனையாக மாற்ற
துடித்துக் கொண்டிருக்கும் என் நண்பர்கள்
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்,
ஸ்ரீகாந்த்

Thursday, July 28, 2011

தானம்

கனவுகள் காண கண்கள் தேவை இல்லை.,
கனவுகளை நிஜமாய் காண கண்கள் தேவை.,
நம் இமை மூடும் போது,
பிறர் விழி திறக்க வழி செய்யுங்கள்...

வாழும் போது ரத்த தானம்..
இறந்த பின் கண் தானம்!!

Thursday, July 21, 2011

நண்பன்

உன் கண்களை பார்த்ததும் உன் மீது காதல் வந்தது,
உன் பெற்றோரைப் பார்த்ததும் நம் காதல் மீது பயம் வந்தது,
ஆனால்
என் நண்பனே பார்த்ததும் நம் காதல் மீது நம்பிக்கை வந்தது...

Sunday, July 10, 2011

கோபத்தின் மீது காதல்

நீ என்னை வெறுக்கும் போது உன் மீது கோபம் வருகிறது,
மீண்டும்
என்னுடன் பேசும் போது உன் கோபத்தின் மீது கூட
காதல் வருகிறது.....

Saturday, May 7, 2011

அன்னையர் தினம்


கருவில் சுமந்து உயிராய் காத்து, உயிர் தந்தவளே.,
தொப்புள் கொடி பிரிந்ததால் என்னவோ, நம் பாச கொடி இணைந்தது.,
நிலா சோறு ஊட்டி,தலாட்டும் தந்தவள் நீ தானே.,
அகரம் தந்து,அன்பும் காட்டியவளும் நீ தானே.,
என் தவறுகளை கண்டிதவளும் நீ தான்,தண்டிதத்வளும் நீ தான்.,
அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்துவிடு,
மனதார எதுவும் செய்யவில்லை.,
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பர்கள்
என்னை பொருத்தவரை உன்னை விட சிறந்த தெய்வம் இல்லை!!!
அம்மா
நீ எனக்காக உழைத்தது போதும் ஓய்வு எடு தாயே உய்யாரமாக
உனக்காக உழைக்க நான் இருக்கிறேன்.
அன்னையே மீண்டும் உந்தன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் உன்னை வணங்குகிறேன்.

Friday, May 6, 2011

என் உணர்விலும் நீ


நேற்று நீ கொடுத்த முத்தம் லேசாக வலித்தது.,
பின் தான் உணர்தேன் கடித்தது கொசு என்று
உன் நினைவில் வாழும் எனக்கு
என் உணர்வில் கூட
உன் நினைவுகள் தான் அன்பே.....

Saturday, April 30, 2011

கவிதைகள்


என் காயத்திற்கு கண்ணீர் மட்டும் ஆறுதல் அல்ல
என் கவிதைகள் கூட தான்...

Thursday, April 28, 2011

திமிரு


உருப்படியாய் பேசலாம் ஒரு வார்த்தை கூரடி என்றேன் SHUT UP என்றால்,
காலாற நடந்து பேசலாம் செல்லடி என்றேன் GET LOST என்றால்,
அன்னை தமிழ்ல விட அவள் பேசும் ஆங்கிலம் ஏத்தனை அழகு!
அவள் உன்னை வசை பாடினால் என்றான் நண்பன் அவனுக்கு
என்ன தெரியும் அவளது வசை கூட எனக்கு தாலாட்டு என்று.....

Monday, April 25, 2011

பிரிவு


என்னால் கிடைத்ததை விட என்னால் இழந்தது அதிகம் நீ,
நான் துரதிர்ஷ்டமானவன் உன்னை பிரிந்தேன்
இப்பொழுது எல்லாம் கிடைத்துவிட்டன உனக்கு
என்னை தவிர!!!
எப்போது கிடைப்பாய் நீ எனக்கு????

கடற்கரை


கடற்கரையாக நீ,
உன்னை வந்து தொடும் அலையாக நான்
எத்தனை முறை விலகினாலும் உன்னை தொட்டு கொண்டு இருப்பேன்!!!

Monday, March 28, 2011

வலி


கை கொடுக்கும் போது நட்பின் வலி தெரிவதில்லை,
கை விடப்படும் போது தான் தெரிகிறது!!!
தோள் கொடுப்பான் தோழன் என்பார்கள்,
நான் கொடுத்த வலி தாங்காமல் என்னை விட்டான் என் தோழன் ...
இன்று நான் வலியில், ஆனால் அவன்
அவன் வழியில்........

Wednesday, March 23, 2011

முத்தம்

உன் எச்சில் என்னும் தீர்த்தத்திற்காக காத்து கொண்டு இருக்கும் பக்தன் நான்....

Sunday, March 20, 2011

இதழ்கள்


நீ பேசும்போது உன் கண்களைவிட உன் இதழ்களை ரசித்தேன்
என் தெரியுமா?
உன் கண்கள் என்னை பார்க்கின்றன உன் இதழ்களோ
என் பெயரை உச்சரிக்கின்றன.....

Saturday, March 19, 2011

ஹோலி பண்டிகை


கரும்பு என்றால் பொங்கல்;
தீபம் என்றால் தீபாவளி;
காதல் வந்தால் வாழ்வில் வண்ணங்கள்

வண்ணகள் என்றால் வேறு என்ன
ஹோலி தான்....

ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள்....

உன் பெயர்


பேப்பரில் பெயர் எழுத பேனா கேட்டாய் என்று நினைத்தேன்,
நீ எழுதியது பேப்பரில் மட்டும்மல்ல என் இதயத்திலும் தான் அன்பே!!!

Friday, March 18, 2011

காத்து இருப்பேன்....


அன்று அர்ஜுனனுக்கு தேர் ஓடியாக இருதான் கிருஷ்ணன்,என் வாழ்கைக்கு நீர் ஊற்றியாக இருதார் கிருஷ்ணமுர்த்தி....

என் தந்தையே உன்னுள் நான் கண்டேன் தாயை

நீ தாலாட்டும் தந்து தலைமேல் தங்கினாய் இந்த தலைமகனை....

நடை பழகிக்கினாய்,நடைவண்டியும் பழகிக்கினாய் பள்ளி செல்ல பாதையும் காட்டினாய் பங்கமில்ல பாசமமும் தந்தாய்....


நீயும், தாயும் உலகம் என்று இருதேன்,என்னோடு கை சேர்க்க தங்கை எனும் பாசமலர் ஒன்றையும் தந்தாய்....


காலங்கள் கடந்தன பள்ளியும் முடிந்தது என் வாழ்கை பயணமும் தொடங்கியது...


தோளுக்கு மேல் வளர்த்தால் தோழன் என்பார்கள் அதனால் தான் என்னவோ என்னை தொலைவில் வைத்து பார்த்தாயோ....


உன்னோடு இருக்கும் நேரங்கள் குறைந்தன,வாழ்க்கையின் வலி கண்டதால் என்னவோ உன் மீதி இருக்கும் மதிப்போ உயர்ந்தது கொண்டே இருந்தது...


தொலை துரத்தில் நான் தொலைபேசி தொடர்புகளுடனும் துலைந்து போன மகிழ்ச்சியுடன் இங்கு நான்...


உன் வெள்ளி விழா மணநாள் காண மகிழ்ச்சியுடன் காத்து இருந்தேன்

கண்டேன் உன்னை
மணக்கோலத்தில் அல்ல மரண கோலத்தில்...

உன்ன மணக்கோலத்தில் அள்ளியணைக்க எண்ணி இருதேன்

மரணகோலத்தில் கூட உன்னை அணைக்க முடியாத அளவுக்கு
என் கைகளை உடைத்துவிட்டான் அந்த கடவுள்....

இது விதியின் விளையாட்டா அல்லது

வாழ்கையில் நீ போராட தரும் பயிற்சியா???

உன் நினைவில் நீ விட்டு சென்ற பணியை தொடரும் நான் பிறப்பாய் நீ என் மகனாக என்ற நம்பிகையோடு காத்து இருப்பேன்....

Wednesday, March 16, 2011

தவிப்பு


புரிந்து கொண்ட நெஞ்சம் புரியமால் தவிக்கிறது .,
புரியாது நெஞ்சம் புரிந்து கொள்ள மறுக்கின்றது.!

வெட்கம்


என் மண்ணில் பிறந்த பெண் விண்ணை பார்க்கும் போது,
அந்த நிலவுகூட வெட்கபட்டு மறைகிறது,அவளின் அழகை பார்த்து!!!