Monday, September 19, 2011

அர்த்தம்

சாக நினைத்தேன் வாழ்வின் அர்த்தம் தந்தாய்,
உன்னோடு வாழ நினைத்தேன் நீயே,
கொன்றுவிட்டாய் உன் பார்வையால்!

Friday, September 16, 2011

எங்கள் கனவு கன்னி

VIP- யாய்  வந்த நட்சத்திரமே,
வாலிபர்கள்  மனதில் வாலி-ball ஆடியவள் நீயே!!!  

உன்னை பார்த்தாலே பரவசம் நீ,
நேருக்கு நேர் வந்தால், துள்ளாத மனமும் துள்ளும்!!!

12 B -ல் அவள் வருவாளா என்று ,காத்து இருந்தேன்,
கண்ணெதிரே  தோன்றினால்
உன்னை  பார்த்தேன்  ரசித்தேன்!!!

பிரியமானவளே,
நீ  ஒரு New, கோவில்பட்டி  வீரலட்சுமி!!!

அந்தபுரத்தில் ,
ஜோடி -யாய்  உன்  கன்னத்தில்  முத்தமிட்டால்
அந்த  time என்  கனவே  கலையாதே .....

அன்று  நட்புக்காக உன்னை இடை  அழகி என்றோம்,
அடித்தது  ஜாக்பாட்  உனக்கு  கொண்டாட்டம்,
எங்களுக்கு  திண்டாட்டம்.. :(

எங்களுக்கு   நீ  வேண்டும் Oncemore.....

Tuesday, September 13, 2011

நினைவுகளுடன்

மனம் விட்டு பேசி மாதங்கள் ஆனாலும்
மனதை விட்டு நீங்கா உன் நினைவுகளுடன் நான்

Tuesday, September 6, 2011

கவிதைகள்

நான் எழுதிய கவிதைகள் எல்லாம் உன்னிடம் கொடுத்தேன்
சுமாராக இருக்கிறது என்றாய்,
ஆம் எல்லாம் சுமாராக தான் இருக்கிறது
உன் கை எழுத்துத்திற்கு முன்னால்...